கம்போடியா- இலங்கைக்கு இடையில் பேச்சுவார்த்தை!!
கம்போடியா மற்றும் இலங்கைக்கு இடையே நேரடியான விமான சேவைகளை நடத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கம்போடிய விஜயத்தின் போது, நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கம்போடிய பிரதமரைச் சந்தித்து உரையாடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் கம்போடிய பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகமான Peace Palace இல் இடம்பெற்றது.
நீண்டகாலமாக இரு நாடுகளுக்கிடையே காணப்படும் மத, கலாசார உறவுகளை நினைவுகூர்ந்த அந்நாட்டு பிரதமர் அந்த உறவை அடிப்படையாகக்கொண்டு இருநாடுகளுக்கிடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கிடையிலான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிவில் விமான சேவைகள் தொடர்பிலான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
நீண்டகாலமாக இரு நாடுகளுக்கிடையே நெருங்கிய தொடர்புகள் காணப்பட்ட போதிலும் இதுவரையில் இரு நாடுகளிலும் தூதுவராலயங்கள் ஸ்தாபிக்கப்படாமையை கருத்திற்கொண்டு அவற்றை துரிதமாக அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
உள்நாட்டு சந்தை வாய்ப்புக்கள் மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், முதலீட்டு பாதுகாப்புக்காக சட்டபூர்வமான அடித்தளம் அமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திய ஜனாதிபதி, எந்தவொரு நாடும் மற்றுமொரு நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாதென்பதே தனது வெளிநாட்டுக் கொள்கை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது, ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்போடிய பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
தலைவர்களினது சந்திப்பை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையிலான புதிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இருநாடுகளுக்கிடையில் தேசிய கவுன்சில் ஒன்றை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு வர்த்தக சபைகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை