உலகம் முழுவதும் பௌத்தம் – கம்போடியாவிடம் மைத்திரி வேண்டுகை!
தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரசார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கம்போடியாவின் தலைநகராகிய நொம் பென்னில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளுக்காக இருநாட்டு தூதரக நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
மேலும் கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்படும் என்றும் கூறினார்.
பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான தொடர்பினை பொருளாதார, வர்த்தக ரீதியாகவும் வலுவடையச் செய்வதுடன், தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகளிலும் கரங்கோர்க்க வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அந்த செயற்பாடுகளுக்காக கம்போடிய மன்னர், பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இரு நாட்டு மகாசங்கத்தினரின் பங்களிப்பில் அச்செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்ததாகவும், கம்போடிய பிரதமருக்கு இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கம்போடிய மகாசங்கத்தினர், கம்போடிய பிரதி பிரதமர் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விகாராதிபதி நாயக்க தேரரினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்ட அதேவேளை, விகாராதிபதி நாயக்க தேரருக்கு ஜனாதிபதி நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை