சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!!

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.


இலங்கைக்கு பெயர் பெற்றுத்தந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.

27 நாடுகள் பங்குகொண்ட குறித்த போட்டியானது தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கையிலிருந்து 8 பேர் கலந்துகொண்டதுடன், வடக்கு மாகாணத்திலிருந்து மூவர் பங்குபற்றினர்.

அதில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலிருந்து இருவரும் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமரன் அணி மற்றும் ஆனந் கிருசாந் அணி ஆகியன வெண்கலப் பதக்கங்களை இப்போட்டிகளில் பெற்றன.

இவர்களைப் பாராட்டும் நிகழ்வு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கிறிஸ்தோபர் கமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.