வீரமுனை தமிழர்கள் மீது கட்டவிழத்துவிடப்பட்ட முஸ்லிம் வெறியாட்டத்தின் 29வது நினைவு நாளாகும்.!!

03.08.1990 அன்று காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்காக அதன் 28வது நினைவுநாளில் கண்டித்து கண்ணீர் விட்ட தமிழர்களும் முஸ்லிம்களும் 06.08.1990 திராய்கேணி படுகொலைகள் பின் 12.08.1990 வீரமுனை படுகொலைகள் நினைவு தொடர்பில் மௌனமாகியுள்ளனர். அப்படியொன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு பாரம்பரிய தமிழ் கிராமமாகும் வீரமுனை. சம்மாந்துரை அருகில் உள்ள முஸ்லீம் கிராமம், போர்த்துகேய குடியேற்றக்காரர்களால் கடலோர பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் இந்த சம்மாந்துறையில் குடியேறியுள்ளனர். முஸ்லீம்களும் தமிழர்களும் வரலாற்றுரீதியில் அருகருகே வாழ்ந்து, ஒரு வளமான , அமைதியான சமூகத்தை கட்டியெழுப்பி இருந்தனர்.

1980களில் தென்பகுதி தமிழர்கள் இனவழிப்புக்கு முகம் கொடுத்தனர் என்றால் 1990களில் கிழக்கு மாகாண தமிழர்கள் இனவழிப்பை எதிர்நோக்கினர்.

அரசின் பக்கம் சாய்ந்து கொண்ட முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்கு எதிராக  தமது மக்களை தூண்டிவிட தொடங்கினர். இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களை குறிவைத்து தாக்க தொடங்கியதன் விளைவாகவே 03.08.1990 காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை புலிகள் நிகழ்த்த காரணமாகியது.

இந்த பள்ளிவாசல் படுகொலைக்கு ஏதுவாக அமைந்த தமிழர் மீதான சில சம்பவங்கள்தான் இவை.

பின் மீண்டும் 29.06.1990 அன்று கோயிலுக்குள் புகுந்த இராணுவத்தினரும் ஊர்காவல் படையினரும் மேலும் பலரை பிடித்து சென்ற்றனர். அவர்களுக்கு என்ன ந்டந்தது என்று இன்றுவரை யாருக்கும் தெரியாதுள்ளது.

இந்த இரு சம்பவங்களை தொடர்ந்து கோயிலில் இருந்த தமிழர்கள்  அங்கிருந்து வெளியேறிய காரைதீவு மகா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்தனர்.

ஆனால் மீண்டும் 03.07.1990 அன்று பாடசாலைக்கு சென்ற இராணுவத்தினரும் இந்த ஊர்காவல் படையினரும் 13 ஆண்களை பிடித்து சென்றனர். பின்பு சித்திரவதை செய்யப்பட்ட இவர்களது உடல்கள் டயர்கள் போட்டு கொழுத்தப்பட்டு கிடந்தன.

இதனால் இந்த மக்கள் வீரமுனைக்கு அருகில் உள்ள ஒரு இடம்பெயர்ந்தோர் முகாமில் தஞ்சமடைந்தனர்.

ஆனால் 10.07.1990ல் இங்கிருந்தும் 15 இளைஞர்கள் பிடித்து செல்லப்பட்டனர். இவர்களும் வழமை போன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். தமது வீடுகளை பார்க்க கிராமத்தினுள் சென்ற 08 பெண்கள் மல்வத்தை சோதனை சாவடியில் கைதுசெய்யப்பட்டு கூட்டு பலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் 26.07.1990ல் 23 பாடசாலை மாணவர்கள் உட்பட 32 இளைஞர்கள் கைது செய்து காணாமல் போயினர்.

குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த 08 ஆசிரியர்கள் 29.07.1990ல் கைது செய்ப்பட்டு காணாமல் போயினர்.

01.08.1990 அன்று 04 பெண்கள் ஒரு குழந்தை உட்பட சவக்காலை வீதியால் சென்றுகொண்டிருந்த 18 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சவக்காலை கோயிலில் எரியூட்டப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் கிடந்தன.

இவை அனைத்தும் அம்பாறையில் உள்ள வீரமுனை என்கின்ற ஒரு கிராமத்தில் மட்டும் நடந்த தமிழருக்கு எதிரான இராணுவம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரிராலும் நடத்தப்பட்ட அநியாயங்கள் ஆகும். இப்படி கிழக்கு மாகாணம் முழுவதும்  தமிழர்கள் பெரும் இன சுத்திகரிப்புக்கு முகம் கொடுத்த நிலையில்தான்

03.08.1990 காத்தான்குடி ப்ள்ளிவாசல் படுகொலை நடந்தேறியது. இந்த காத்தான் குடி சம்பவத்துக்கு பின் கிழக்கு மாகாணத்தில்  முஸ்லிம் காடையர்கள் வெளிப்படையாக நடத்திய தமிழர் மீதான வெறியாட்டம் 12.08.1990 –வீரமுனை படுகொலை. வார்த்தைகளால் வ்ர்ணிக்க இயலாத பயங்கரம்.  வீரமுனை வெறியாட்டம் அரங்கேறிய அதே வேளை துரைநிலவணி, ஏறாவூரிலும் அவர்களின் தமிழர் மீதான வெறியாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 12.08.1990  நடந்த இந்த படுகொலையானது வரலாற்றில்  வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என  பதிவாகியுள்ளன.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவர்கள் மீது 12.08.2018 முஸ்லிம் ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.

No comments

Powered by Blogger.