சிவகார்த்தியின் செப்டம்பர் கொண்டாட்டம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. சிவகார்த்திகேயனுடன் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். சென்றாண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெற்றி பெற்ற கடைக்குட்டி சிங்கம் போலவே குடும்ப படமாக இப்படம் அமையவிருக்கிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.


இப்படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' என்ற எம்ஜிஆர் நடித்து 1965ஆம் ஆண்டு வெளியான படத்தின் டைட்டில் வைக்கவுள்ளதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், இத்தகவல் வெளியான உடனே விஜயா ப்ரோடக்சன் வெளியிட்ட உரிமைக்காப்பு கடிதத்தால் அத்தலைப்பு கைவிடப்பட்டு மற்றொரு தலைப்பிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


இன்று வெளியான இப்படத்தின் போஸ்டரில் எங்க வீட்டுப் பிள்ளை என்ற தலைப்பை நம்ம வீட்டுப் பிள்ளை என மாற்றியுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது, ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, டி. இமான் இசை, ரூபன் படத்தொகுப்பு. செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகவிருக்கிறது.

No comments

Powered by Blogger.