யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குணநலம் பெறும் நிலையத்தை திறப்பு!!

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அந்தவகையில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி உதவியினால் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.சரவணபவன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.