உனக்காக ஒரு கவி !!

கலப்படமில்லா நிழற்படமாய் வியக்கத்தகு மனப்பான்மை கொண்ட இரக்கம் நிறை இதயத்தான் நீ...

அவ்விதயத்தில் களங்கமில்லா மலர்மணம்போல் மணக்கும் மாசற்ற மனத்தானும் நீ...!!

கன்னல் மொழி கரத்தில் ஊற ,வள்ளலாய் ஊறும் உன் வரிகளில் மொழிகளும் சிலிர்த்திட கண்டெடுத்த மெய்யான உயிர் மொழியும் நீ....
அவ்வுயிர் மொழிக்குள் தனிமொழி பேசும் தனித்துவ தரத்தானும் நீ...!!

கள்ளூறும் உன் கற்பனை சொல்லில் உள்ளூறும் தேன்மொழிச்சாற்றில் பிறர்மனதில் உயர்வாய் வாழ்வோனும் நீ...
வாழும் உயிரினிலெல்லாம் வஞ்சமில்லா அன்பை தெளிக்கும் நெஞ்சினிக்கும் கவிஞனும் நீ...!!

ஆணாய் பிறந்தாலும் மன ஆதிக்கமில்லா அன்பிலும் ,அமைதி பூணும் குணத்திலும் வானாய் உயரும் உயர்குணத்தான் நீ...
மீன் வாழும் நீர் நிலையாய் தேன்பொங்கிடும் திரவியக்கடலும் நீ...!!

எச்சொற்கள் கொண்டு எழில்சமைத்தாலும் அச்சொல்லும் அழகுகூடி ,எரியும் தழலும் குளிர் நிலவாகி பனி விளையும் மொழிக்களம் நீ...
அம்மொழிக்களமும் சிறந்து உன் வாழ்வும் சிறந்திடவே வாழ்த்துரைக்கின்றேன் நான்..!!

Safana Simrath
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.