திருமண நிகழ்வொன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 63 ​பேர் உயிரிழப்பு!!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காபூலில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின்போது, தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (17) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, காபூல் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர், பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதுடன் அதில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 150 வரையில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.