கடலரிப்பை தடுக்க இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை!!
அம்பாறை – நிந்தவூர் கரையோரப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதனை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
குறித்த கடல் அரிப்பினால் மீன்பிடி வாடிகள் பாதிப்புறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, கடல் ஊடறுத்து செல்வதால் கரையோரத்திலுள்ள 40க்கும் அதிகமான தென்னை மரங்களும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
மேலும் நிரந்தரமாக கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கியதாகவும் எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை