ஜெயலலிதாவை விட அதிகம் யோசிப்பவர் எடப்பாடி!!

ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது ஜெயலலிதாவை விட அதிகம் யோசிப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆவின் பால் விலை, பால் கொள்முதல் விலை ஆகியவற்றை நேற்று உயர்த்தி தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.





இந்த நிலையில் மதுரையில் இன்று (ஆகஸ்ட் 18) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், பால் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மக்கள் பாதிப்படையக் கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு. பால் விலை உயர்வை அனைத்து தரப்பு மக்களும் ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்.


நாங்கள் யாரையும் துன்புறுத்துவது கிடையாது.” என்று தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு திட்டத்தை நிறைவேற்றப்போகிறார் என்றால் அதற்காக பல முறை யோசிப்பார் எனவும், ஜெயலலிதா 9 முறை யோசித்தால் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாகவும் தெரிவித்த செல்லூர் ராஜு, “ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதுகுறித்த மக்களின் எண்ணம் எப்படி இருக்கும், அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துதான் முதல்வரும், துணை முதல்வரும் அறிவிக்கிறார்கள்.



எனவே பால் விலை உயர்வால் எந்த பாதிப்பும் இருக்காது என நான் கருதுகிறேன்” என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏற்காட்டில் நடந்த ஒரு விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்துவருகிறார்’ என்று புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.