வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினருடன் எழுக தமிழ்-2019 பரப்புரைக் குழுவினர் சந்திப்பு!
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி குறித்த தகவல்களையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் வகையில் எழுக தமிழ்-2019 பரப்புரைக் குழுவினர் கடந்த திங்கள் கிழமையன்று சந்திப்பு நடாத்தியுள்ளார்கள்.
ஏ-9 நெடுஞ்சாலை, கிளிநொச்சியில் உள்ள அவர்களது தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் தலைவி திருமதி கலாறஞ்சினி உள்ளிட்டவர்களுடன் இக் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காத்திரமான உடனடித் தீர்வு எட்டப்பட்டேயாக வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் ஒன்றாக 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்திட வேண்டும்' என்பதனை வலியுறுத்துவதன் அடிப்படையில் இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவ்வுரையாடலில் தமது நீதிக்கான போராட்டத்தின் போதான சவால்கள், நெருக்கடிகள் குறித்தும் வாழ்வியலில் எதிர்நோக்கிவரும் இடர்பாடுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அரசியல் ரீதியாக தாமும் தமிழ் மக்களும் அநாதரவான நிலையில் கைவிடப்பட்டுள்ளது குறித்த ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இதனடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்வு அவசியமானதென்பதையும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஓகஸ்ட்-30 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் உறவுகளை கையளித்த ஓமந்தை பகுயில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் ஆதரவு தெரிவித்து பங்கேற்பதாக எடுக்கப்பட்டிருந்த முடிவை அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை