வாழ்க்கை என்னும் நாடகம் -கவிதை!!
வாழ்க்கை என்பது நாடகமேடை
சாகும் வரையில் நடிப்பதே வேலை
தினமொரு வேடங்கள் மனமும் ஏற்று
முகமொரு பாவனை பொய்யான பகட்டு!!
அனுபவம் தேடி அலையும் சீவன்
முதுமை வந்தும் முடியாது தேடல்
கருவிலும் தனிமை கல்லறையில் தனிமை
இடையில் மட்டும் வேண்டுமோ துணை!!
ஒருமுறை ஒத்திகை மறுமுறை ஒப்பனை
நிரந்தரம் இல்லாத நித்திய நடிகர்கள்
சிறுதுளி புன்னகை பலதுளி கண்ணீர்
விடையாகும் வாழ்வில் வலி மட்டும் மீதி!!
சொல்லாத சோகம் இதயத்தில் நிரம்ப
இல்லாத மகிழ்ச்சி உதட்டினில் வழிய
ஏமாற்றங்களும் மனதினில் ஏங்க
இயற்றிய வாழ்வும் விடையின்றி முடியும்!!!
கூடலூர் சிந்துஷன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை