காட்டு யானைகளால் விவசாயிகள் பாதிப்பு!
முல்லைத்தீவு புத்துவெட்டுவான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற் செய்கையினை காட்டு யானைகள் அழித்து வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட புத்துவெட்டுவான் மருதங்குளத்தின்கீழ் இம்முறை 70 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் காட்டுயானைகள் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த பெருமளவான நெற்பயிர்களை அழித்துள்ளன.
குறித்த பகுதியில் சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள பகல் வேளைகளில் கால்நடைகள் மற்றும் காட்டு விலங்களின் அழிவுகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக காவலில் ஈடுபட்டு வருவதுடன், இரவு விழித்திருந்தும் தமது பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
எனினும் எதிர்பாராத நேரத்தில் நெற்காணிகளுக்குள் புகுந்த யானைகளை துரத்த முற்பட்ட போதும், யானைகள் விவசாயிகளை துரத்தியதுடன், பயிர்ச்செய்கைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு யானைகளால் அழிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பித்தபோதும் பயிரழிவுகளை மதிப்பீடு செய்வதற்கு நீண்டகாலம் எடுப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை