என் பயணம் -கவிதை!!
பயணங்களைத் தொடரமுடியாதபடி
பாதைகளை அடைத்து வைத்திருக்கிறார்கள்..
உடைத்து எறியமுடியாத வேலிகளும்
அவிழ்க்க முடியாத கட்டுக்களும்
சுற்றிக்கிடக்கின்றன !
கண்ணின் நீர் வழியாதபடி
இமைகள் இறுக்கம் கொள்ளும்
வித்தையினை
இங்குதான் கற்றுக்கொண்டேன் !
வேப்ப மரத்துப் பட்டைகளை
சுவைப்பதைப்போல்
என் நாட்கள் நகர்கின்றன...
பாறைகளின் இடுக்குகளில்
ஔிந்திருக்கும் இருள் போல்
மனம் கனக்கின்றது !
எனக்கான தேவைகளை புறக்கணித்து
பிறர் வாழ்தலில் தான்
என்னை நான் சந்திக்கின்றேன் !
தமிழும் மொழியும் எனும்
நேர்கோட்டில் தான் பயணிக்கிறேன்
எதற்கெனவும் எதுவுமில்லை
அவரவர் உலகை மீட்டுத்தரும்படி
இறைவனிடம் மன்றாடுகின்றேன் !
அன்பழகி கஜேந்திரா
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை