மட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!
கிரவல் மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு – உறுகாமம் கிராம மக்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளதாவது, “தமது உறுகாகமம் பிரதேசத்தில் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி பெற்று, காடுகளை அழித்தே மண் அகழப்படுகின்றது.
மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரதேச செயலாளர், கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கதோர் விடயமாகும்.
காடுகளை அழித்து மண் அகழப்படுவதால் காடுகளினுள் இருந்து தற்போது யானைகள் தமது கிராமத்திற்குள் நுழைகின்றன.
இதனால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘நிறுத்து நிறுத்து அகழ்வை நிறுத்து’, ‘அதிகாரிகளே பாராபட்சம் வேண்டாம்’, ‘எமது வளத்தை சூரையாடாதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி ஆதவன்

.jpeg
)





கருத்துகள் இல்லை