தீவிரவாதிகள் ஊடுருவியதால் தமிழகத்தில் பதற்றம்!!

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதனால் கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கோவை பொலிஸ் ஆணையர் சுமித் சரண், ”6 தீவிரவாதிகள் கோயம்புத்தூர் நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது. போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். கோவை மாநகரம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பொலிஸார். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர பொலிஸார் தரப்பிலிருந்து எவ்வித ஒளிப்படங்களும் வெளியிடப்படவில்லை. எனவே எங்கிருந்து தகவல் வந்தது என்று வெளியிடமுடியாது” எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து கோவையிலுள்ள ரயில் நிலையம், விமானநிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கோவை நகர் முழுவதும் பாதுகாப்புபடையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் இலங்கையை ஒட்டியுள்ள கடல் எல்லையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மோப்ப நாய்பிரிவு, வெடி குண்டு மீட்புபிரிவு உள்ளிட்ட அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி மாத கோயில் திருவிழா, மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் போன்றவற்றில் தீவிரவாதிகளினால் தாக்குதல் நடத்தலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் கோவையில் தங்கியுள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தையடுத்து கோவைக்கு நேற்று நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் ஏனைய 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.