அலையன்ஸ் எயர் நிறுவனம் -பலாலியில் - தென்னிந்திய விமான சேவை!!
பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்துக்கான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அதில் அலையன்ஸ் எயர் நிறுவனமும் ஒன்றாகும் என்று இலங்கை சிவில் விமானசேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார்.
எயர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனம், இந்தியாவில் 54 நகரங்களை இணைக்கும் வகையில், உள்நாட்டு விமான சேவைகளை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்திடம், பலாலி விமான நிலையத்துக்கு இயக்கக் கூடிய, 70 – 72 ஆசனங்களைக் கொண்ட l ATR 72-600 ரகத்தைச் சேர்ந்த 18 விமானங்களும், 48 ஆசனங்களைக் கொண்ட ஒரு ATR 42-320 விமானமும் உள்ளது.
2000 ஆம் ஆண்டு இந்தியாவில் பா.ஜ.க. அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்கள் கொழும்புக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கம் உதவியிருந்தது.
போயிங் B737 மற்றும் எயர் பஸ் A320 விமானங்களை இயக்கக் கூடிய வகையில், இலங்கையின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கிணங்க தற்போது பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒக்டோபர் மாதம் பலாலி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், ரேஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு முகவர் அமைப்புகளான குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில், குறுகிய காலஅவகாசத்தில் பலாலியில் குடிவரவு மற்றும் சுங்க பணிகளை ஆரம்பிக்க முடியும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை