தேர் சரிந்து விழுந்ததில் பக்தர் பாதிப்பு!

பண்டாரவளை, நெலுவ ஸ்ரீ சிவசுப்பரமணியம் ஆலயத்தில் இன்று (23) இடம்பெற்ற தேர் உற்சவத்தின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலய தேரை நெலுவ – பதுளை பிரதான பாதைக்கு திரும்பும் போது வேகமாக வந்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தேருடன் மோதியுள்ளது.

இதன் போது வீதியில் பயணித்த பக்தர் ஒருவர் மீது தேர் சரிந்து விழுந்துள்ளது. அதன் காரணமாகவே குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அட்டாம்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.