இலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இத்தகவலை இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து பயங்கரவாதிகள் நாட்டிற்குள் வருவதனையும், வெளியே தப்பித்துச் செல்வதனையும் தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆறு உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக , தமிழகத்தின் கோவை உட்பட பல மாவட்டங்களில் பெரும் பதற்ற நிலலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சூரிய பண்டார, இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்றும், ஏனெனில் கடலோரத்தின் பாதுகாப்பு முன்னரை விடவும் ஏப்ரல்-21 குண்டுத் தாக்குதலின் பின்னர் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கரையோரப்பகுதிகளில் கடற்படையினர் எந்த நேரத்திலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் பயங்கரவாதிகள் இந்தியாவினுள் நுழைந்துள்ளமை தொடர்பாக எத்தகைய உத்தியோகப்பூர்வ தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளமை தொடர்பான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.