சட்ட விரோத முறையில் மணல் மாபியா சி.சாந்தி!!!

வடமாகாணத்தில் பரப்பளவில் பெரியதும் சனத்தொகையில் குறைந்ததும் இயற்கை வளங்கள் நிறைந்ததுமான மாவட்டம் முல்லைத்தீவு. இறுதிவரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் இம்மாவட்டத்தின் இயற்கை வளங்கள் 2009 வரை பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

சட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. பாலியாறு , அமதிபுரம் , பேராறு கல்லாற்றை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு பெருமளவில்  இடம்பெறுகின்றது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள புராதன அடையாளமான வாவெட்டி மலை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்பட்டு தென்பகுதிகளிற்கு கற்களாக ஏற்றப்படுகின்றது.

இப்பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப் படுத்தப் பட்டுள்ள போதிலும் இரண்டு கல் அகழும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பெருமளவில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு வருடத்தில் 600 கியூப் கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மூவாயிரம் கியூப் கல் அகழப்படுகிறது. கொழும்பில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் கொழும்பு நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கருங்கற்களை அகழந்தெடுத்து கொழும்புக்கு ஏற்றுகின்றனர்.

அத்துடன் முல்லைதீவில் சிலாவத்தை தியோகுநகர்  உடுப்புகுளம் உப்புமாவெளி  எனும் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் கடற்கரை மணலும் , மற்றும் சிறு குளங்களை அண்டிய பிரதேசங்களில் வெள்ளைநிற பூச்சு மணலும் மணல் மாபியாக்களால் அரச அங்கீகாரத்துடன்(லஞ்சம் மூலமாக) ஏற்றபடுகிறது.  அத்துடன் இப்பிரதேசங்களில் கடற்கரை அண்டிய பிரதேசம்  கடற்கரை மணலும் வெள்ளை மணல் உள்ள குளக்கரை அண்டிய பிரதேசம் வெள்ளை மணலும் , தனியார் காணி உரிமையாளர்களும் சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் மணல் கொள்ளையில் ஈடு படுகிறார்கள்.. இவர்களிற்கு சில பொலிஸ் அதிகாரிகளும் ஆதரவளிக்கிறார்கள் ..இங்கு குறிப்பிட வேண்டிய விடையம் சுவாமி தோட்டம் என அறியபடுகின்ற பிரதேசத்தில் மணல், பனை மரம் போன்றவை தோட்டத்திற்கு பொறுப்பானவரின் அனுமதியுடன்(இது ஆயர் இல்லத்திற்கு தெரியுமோ என்பது கேள்விகுறி.. ஏனெனில் அவர்கள் மக்களிற்கானவர்கள்..) அழிக்கபடுகின்றன என்பது தான் வேதனைக்குரிய விடையம்... இதற்கு உள்ளூர் சில லஞ்சவாதிகளும் உடந்தை...

சிவமோகன்(சிலாவத்தையை பிறப்பிடமாக கொண்டவர்) , சாந்தி சிறீஸ்கந்தராசா( இவரும் காடழித்து வயல் உருவாக்கியவர் என்று சிவமோகன் அவர்களால் தெரியபடுத்தபட்டவர் ) போன்றவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற போதிலும் இவற்றைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை அத்துடன் பிரதேசசபை உறுப்பினர்களும் உடந்தை...

 கசப்பான உண்மை என்னவெனில்  இச் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் பலர் இவ்விரு அரசியல்வாதிகளினதும் ஆதரவாளர்கள் மற்றும் பினாமிகளாவர். அரசியல் செல்வாக்கு மற்றும் இலஞ்சம் போன்ற காரணங்களால் பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள்.

அமேசன் காட்டிற்கு pray பண்ணும் அதே நேரம் இவற்றையும் கவனித்தால் சிறப்பாக இருக்கும். 

 லஞ்சம் வாங்கி எனது கிராமத்தை அழித்து தமது வயிற்றை நிரப்பும் அரச ஊழியர் அதை நிறுத்தி நாட்டிற்காய் நாட்டு மக்களிற்காய் இவற்றை கவனத்தில் கொள்ளும் வரை பகிருங்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.