தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!

82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது எனவும் அதில் தமிழ் மிகப் பழமையான மொழி என ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும் டேராடூன் இந்திய வன உயர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டன.

அதன்படி தெற்காசியப் பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது.

திராவிடம், இந்தோ–ஐரோப்பா, சீனா–திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த 6 மொழிக் குடும்பங்களில் முதன்மையானதும் பழமையானதும் திராவிட மொழிக் குடும்பமே என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர்.

இதில் பழைமையான காலத்தால் முற்பட்டது மொழி தமிழ் என்றும் சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும் காப்பியங்களும் தற்காலம் வரை காணக் கிடைக்கின்றதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.