அமேசனில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிப்பு!

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாக பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவர்கள் தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், முதல் கட்டமாக 700 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரேசில் இராணுவ அமைச்சர் பெர்னாண்டோ அசி வீடோ தெரிவித்துள்ளார்.
அமேசன் காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது.

மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூவெலா உள்ளிட்ட 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன.

இந்த காட்டில் அரிய வகை மரங்கள், உயிரினங்கள், அபூர்வ விலங்கினங்கள், பூச்சிகள் உள்ளன.

இந்தநிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் அமேசன் காட்டில் தீ பற்றியது. மள மளவென காட்டுத் தீ பரவியது. இதனால், பல கி.மீ. தூரத்துக்கு தீ பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும் உலக நாடுகளும் வலியுறுத்துகின்றன.

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாக பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவர்கள் தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், முதல் கட்டமாக 700 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரேசில் இராணுவ அமைச்சர் பெர்னாண்டோ அசி வீடோ தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.