பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் கணக்கெடுப்பு ஆரம்பம்!!

பாடசாலைக்கு செல்லாத 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.


இதனூடாக குறித்த பிள்ளைகளை அடுத்த தவணையிலிருந்து பாடசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது என அதிகார சபையின் தலைவர் எச்.எம்.அபேரத்ன குறிப்பிட்டார்.

அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தேவையான அனைத்து உதவிகளை வழங்குவற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் 22 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒருபோதும் பாடசாலைக்கு செல்லாத 17 பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டனர் எனவும், அத்துடன் 378 பிள்ளைகள் பாடசாலை கல்வி நடவடிக்கையை இடை நிறுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.