நல்லூரானின் 21ஆம் நாள் உற்சவம்!!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் 21ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது.


21ஆம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) கஜவல்லி மகாவல்லி உற்சவம் இடம்பெற்றது.

இந்த விழாவில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு முருகனின் ஆசியைப் பெற்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இந்த பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 30ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

இம்முறை திருவிழாவினை முன்னிட்டு கோயிலுக்கு செல்லும் நான்கு பிரதான நுழைவாயில்களிலும் விசேட சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.