கிளிநொச்சியில் இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா!!

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்க அமைய வட மாகாண மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் நெறிப்படுத்தலில் கிளிநொச்சியில் திருக்குறள் பெருவிழா 2019 இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்றலில் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து ஆரம்பமான ஊர்வலம் கூட்டுறவாளர் மண்டபத்தை சென்றடைந்தது.

அதன்பின்னர் அங்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் தலைமையில் திருக்குறள் பெருவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் வாழ்நாள் தலைவர் வே இறைபிள்ளை கலந்துகொண்டார்.

மேலும் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) ந.திருலிங்கநாதன், கரைச்சி பிரதேச செயலர் த முகுந்தன்,யாழ் பல்லைகழக அரசறிவியல்துறை தலைவர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கம்,கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசணமுகம்,முனைவர் மனோண்மனி சண்முகதாஸ் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வில் சிறப்புரையாற்றியிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.