‘நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மைலாஞ்சி பாடல் வெளியாகிறது!!

‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல் சிங்கிள் பாடலான ‘எங்க அண்ணன்’ வெளியாகி இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் மைலாஞ்சி பாடல் வரும் 28ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்துள்ளார்

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். அனு இம்மானுவேல்  ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர்களுடன் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

டி.இமான் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.