இலங்கையை இதுவரை ஆட்சி செய்தது பௌத்த அரசாங்கங்களே - லக்ஷ்மன் கிரியெல்ல!!

நாட்டை இதுவரை ஆட்சிசெய்த அத்தனை அரசாங்கங்களும் பௌத்த அரசாங்கங்கள் என்று பெருமிதம் வெளியிட்டுள்ள அமைச்சரான லக்ஷ்மன் கிரியெல்ல, பௌத்த மதத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்தே செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


கண்டி - ஜம்புகஹாபிட்டிய அனுரகல விகாரையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டை ஆட்சிசெய்த அனைத்து அரசாங்கங்களும் பௌத்த அரசாங்கங்களே. இலங்கையில் இப்போது அல்ல முன்பும் பின்னரும் பௌத்த அரசாங்கமே ஆட்சிசெய்யும். கடந்த அரசாங்கமும் பௌத்த அரசாங்கம் என்பதுபோல நல்லாட்சியும் பௌத்த அரசாங்கமாகும்.

இந்த நாட்டை ஆட்சிசெய்ய அனைத்து அரசாங்கங்களும் பௌத்த அரசாங்கங்களாகும். ஆகவே பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு நாங்கள் அரசியலமைப்பின் ஊடாக அந்த உரிமையை வழங்கியிருக்கின்றோம்.

சிலர் அநாவசியமான முறையில் இனவாதத்தை விதைத்து வருகின்றனர். பௌத்த சாசனத்தை அழிக்க முயற்சிப்பதாகவும், அதற்கு இவர்களே பொறுப்பு கூறவேண்டும் என்றும் கூறித்திரிக்கின்றனர்.

எனினும், எமது பௌத்த தர்மத்திற்கு அமைய நாங்கள் மிகவும் பொறுமையாகவும் ஏனைய மதங்களை மதித்தும் பௌத்த தர்தமத்திற்கமைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.