யாழ். பளை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு!

பளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் சின்னய்யா சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பளை பொலிஸ் பிரிவின் கரண்டிய பிரதேசத்தில் ஏ.கே47 ரக துப்பாக்கி ஒன்றும், 2 மகஸின்கள், 120 ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் வெடிப்பொருட்கள், தூரம் பார்க்கும் கருவி உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகளினால் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.