பொதுஜன பெரமுனவில் எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா அங்கத்துவம்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.


குறித்த இருவரும் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, குறித்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.