பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.
பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.
பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை