நீயே என் ராஜமாதா -கவிதை!!
நீ விட்டுப்போன
வெறுமையான
என் பழைய பிரபஞ்சத்தில்தான்
நான் தனித்திருத்து
உன்னை நேசிக்கிறேன்...
இப்போதெல்லாம்
உன்னைக்கேட்டு
உன்னை காதலிக்கவேண்டிய
அவசியமே இல்லை...
இது எனது காதல்!
இது எனது உலகம்!
இந்த உலகத்துக்கு
நான்தான் ராஜா!
நானே மந்திரி!
நான் ஒரு சேவகன்!
நானே ஒரு தனிக்குடிமகன்!
ஆதலால் நான் இங்கே
ஆக்கபூர்வமாக
உன்னை நேசிக்கிறேன்!
நீ கூட துணைக்குவராத
என் உலகம்
அவ்வளவு அழகு!
நீ வந்து பார்த்தால்
பொறாமைப்படும் அளவுக்கு
அது பேரழகு!
என்னுள் இயங்கும்
இந்த உலகத்தின்
ராஜ மாதாவாக
உன்னை கண்ணுற்று
நீயே மூற்சையுறக்கூடும்..!
தெளிவுற்ற பொழுதில்
ஓடி வந்து
எனக்காக புதுப்பித்த
உன் பழைய நேசத்தை
அப்பொது பகிரலாம்!
எனினும்
உன்னை நீயாகவே
இருக்கச்சொல்லி விட்டு
எனது உலகத்தை
உன்னிடமிருந்து
காப்பாற்றி கடந்து விடுவேன்...
ஏனெனில்
என் உலகத்தின்
ராஜமாதாவான உன்னை
அங்கேதான்
நான் தனித்திருந்து
சுதந்திரமாக நேசிக்க முடியும்...
வாகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
வெறுமையான
என் பழைய பிரபஞ்சத்தில்தான்
நான் தனித்திருத்து
உன்னை நேசிக்கிறேன்...
இப்போதெல்லாம்
உன்னைக்கேட்டு
உன்னை காதலிக்கவேண்டிய
அவசியமே இல்லை...
இது எனது காதல்!
இது எனது உலகம்!
இந்த உலகத்துக்கு
நான்தான் ராஜா!
நானே மந்திரி!
நான் ஒரு சேவகன்!
நானே ஒரு தனிக்குடிமகன்!
ஆதலால் நான் இங்கே
ஆக்கபூர்வமாக
உன்னை நேசிக்கிறேன்!
நீ கூட துணைக்குவராத
என் உலகம்
அவ்வளவு அழகு!
நீ வந்து பார்த்தால்
பொறாமைப்படும் அளவுக்கு
அது பேரழகு!
என்னுள் இயங்கும்
இந்த உலகத்தின்
ராஜ மாதாவாக
உன்னை கண்ணுற்று
நீயே மூற்சையுறக்கூடும்..!
தெளிவுற்ற பொழுதில்
ஓடி வந்து
எனக்காக புதுப்பித்த
உன் பழைய நேசத்தை
அப்பொது பகிரலாம்!
எனினும்
உன்னை நீயாகவே
இருக்கச்சொல்லி விட்டு
எனது உலகத்தை
உன்னிடமிருந்து
காப்பாற்றி கடந்து விடுவேன்...
ஏனெனில்
என் உலகத்தின்
ராஜமாதாவான உன்னை
அங்கேதான்
நான் தனித்திருந்து
சுதந்திரமாக நேசிக்க முடியும்...
வாகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை