கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பின் கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அமுல்ப்படுத்தப்படவுள்ளது.


இலங்கை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட போக்குவரத்து திட்டமானது இன்று காலை 7 மணிமுதல் 9 மணிவரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 6 மணிவரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து திட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுபிட்டி நோக்கி செல்லும் வாகனங்கள், ஹெய்க் வீதியில் வலதுபக்கமாக திரும்பி காலி வீதி ஊடாக பயணிக்க முடியும்.

அதேபோன்று கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை பயணிக்கின்றவர்கள் பனைமர வீதியில் இடதுபக்கம் திரும்பி, காலி வீதியூடாக பயணிக்க முடியும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.