ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!!
தினகுரல் ஊடகவியலாளர் ஒருவருக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.அமைச்சரின் இந்த காடைத்தனமானச் செயற்பாட்டை இளம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதற்காக அமைச்சர் திகா, சம்மந்தப்பட்ட ஊடகவியலாளரிடமும் ஊடக நிறுவனத்திடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் இளம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தினகுரல் ஆசிரியர் பீடத்துக்கு சென்றும், சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரின் வீட்டுக்கு சென்றும் மிரட்டல் விடுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இ.தொ.கவிலிருந்து திகாவுடன் வந்து ஒட்டிக்கொண்ட நகுலேஸ், பிரவுன்சிக் வீடு திட்டத்தில் அரசியல் செய்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மூக்குடைப்பட்டவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
(நகுலேஸின் கடந்த கால செயற்பாடுகள், குறிப்பாக பிரஜாசக்தி நிலையங்களில் செய்த ஊழல் மோசடிகள் விரைவில் மலையக மக்களுக்கு வௌிப்படுத்தப்படும்.)
முதுகெலும்புள்ள ஊடகவியலாளர்களாக
ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை