ஜனாதிபதி ஆசனத்தில் கூட்டணி அமைப்பதிலும் இன்று சிக்கல் நிலை!!
முதலாளிமார் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு முதலிடம் வழங்கும் அரசாங்கத்தை தோற்கடித்து, தொழிலாளர்களுக்கான அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலையக தோட்டத் தொழிலாளர்களே மிகக்குறைந்த வருமானத்தைப் பெறும் தரப்பினராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசாங்கம் தொழிலாளர்களை மறந்து செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இன்று தோட்டத் தொழிலாளர்களே அதிகுறைந்த சம்பளத்தைப் பெறும் பிரிவினராக ஸ்ரீலங்காவில் இருக்கின்றார்கள்.
சாதாரணமாக அரச அலுவலகம் ஒன்றில் சுத்தம் செய்யும் அல்லது கழிவறைகளை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்குக்கூட 1300 ரூபா உட்பட அரச உத்தியோகத்தர் என்பதால் மேலதிக சலுகைகளும் கிடைக்கின்றன.
ஆனால் பெருந்தோட்டங்களில் தொழில் செய்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு 680 ரூபா மட்டுமே நாளாந்த சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த சம்பளத்தை நிர்ணயம் செய்கின்ற, தோட்டங்களை நிர்வகிக்கின்ற தலைவர்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தில் உள்ளவர்கள் அந்தத் தோட்டங்களின் செயற்பாடுகள் பற்றியோ தொழிலாளர்களின் ஊழியம் பற்றியோ சிந்திப்பதில்லை.
தேயிலை எவ்வாறு பயிரிடப்படுகிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அரசாங்கமும் முதலாளிகளையும் நிறுவன உரிமையாளர்களையுமே பாதுகாத்து வருகின்றது. இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.
கூட்டணி அமைப்பதிலும் இன்று சிக்கல் நிலை. அதேபோல மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச விடயத்திலும் இன்னும் வேட்பாளர் நியமிக்கப்படவில்லை. தான் ஜனாதிபதி ஆசனத்தில் இருந்தால் தன்னை மட்டுமே பராமரிக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.
இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். பெருந்தோட்டங்களில் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அரசியல்வாதிகளிடம் அல்லாமல் கண்காணிகளிடமே முதலில் முறையிடுகின்றனர். அப்படியான அரசாங்கமே நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்” என கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை