வருகின்ற ஜனாதிபதி தேர்தலும் கூட்டமைப்பின் பொறுப்பற்றதன்மையும்!!

 நாடு ஓர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர் நோக்கி உள்ள நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கண்ப்புகளின் அடிப்படையில் இம்முறை ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியம் பெறுகின்றது.

 இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடி யாரை இம்முறை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எட்டப்படாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புப்பின் பாரளுமன்ற உறுப்பினகள் சிலர் தங்களது சுயலாப அரசியலுக்கு சிலரை ஆதரிக்கவும் தொடங்கி விட்டார்கள்.


 அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை தெரிவு செயல்படாத நிலையில் சஜித் பிரேமதாசா ஆதரிக்க தொடங்கி விட்டார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள்.இதேவேளை சஜித்திற்கு தனது விசுவாசத்தை கட்டுவதற்கு சஜித் தேவனாக உருவெடுக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்.


 மேலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மதவாதத்தை துண்டி சுயலாப அரசியல் புரியும் செல்வம் அடைக்கலநாதன் தன்னுடைய மகனுடன் சஜித்தை சந்தித்து தன்னுடைய ஆதரவுக்கான சமிக்கையை வழங்கி உள்ளார் . இருப்பினும் சித்தார்த்தன் தன்னிச்சையாக கோத்தா சந்தித்துள்ளார்.


 இதேவேளை சம்மந்தன் சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறி வருகிறார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி ஆதரித்து மைத்திரியை ஆதரித்த கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒன்றையும் பெற்றுக் கொடுக்க வில்லை.தற்பொழுது மைத்திரி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என பொறுப்பற்ற முறையில் கூறிவருகின்றது கூட்டமைப்பு. எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரித்து வேண்டும் அவர்கள் உடன் கூட்டாக இணைந்து பேரம்பேசுவனுடாகவே தமிழர்களின் உரிமைகளை ஒரளவு என்றாலும் பெறமுடியும்.


 அதைவிடுத்து ஒவ்வொரு பாரளுமன்ற உறுப்பினகளும் தன்னிச்சையாக செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்போவதில்லை மாறக அப் பாரளுமன்ற உறுப்பினகளின் தனிப்பட்ட தேவைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்படும்.மேலும் ஜனாதிபதி தேர்தலில் பின் ஜனாதிபதி எங்களை ஏமாற்றி விட்டார் என அறிக்கை விடுவதே மிஞ்சும்

No comments

Powered by Blogger.