எவரெஸ்ட்டிற்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுசெல்லத் தடை!!

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை எவரெஸ்ட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வருபவர்களால் அந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவிலான குப்பைகள் சேர்வதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணியின்போது 10 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், எவரெஸ்ட் பகுதியில் குப்பைகள் சேர்வதைக் குறைக்கும் வகையில் 30 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மலையேறிகள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.