ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா?

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட  மதப் போதனையாளரான ஜாகிர் நாயக்கிடம் மலேசிய பொலிஸார் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை சுமார் நான்கு மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றும்(திங்கட் கிழமை) விசாரணைகள் தொடரவுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் தேடப்படும் மத போதனையாளரான ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தரக் குடியுரிமை வழங்கியுள்ள நிலையில் அவரை இந்தியாவிற்கு  நாடு கடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற  நான்கு இந்திய வம்சாவளி அமைச்சர்களும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மலேசியாவின் மாநிலங்களான பெர்லிஸ், கெடா ஆகியவை தங்களுடைய எல்லைக்குள் ஜாகிர் நாயக் எந்த நிகழ்ச்சியிலும் உரையாற்றக் கூடாது என தடை விதித்துள்ளன. அதேபோன்று சரவாக் மாநிலம் ஜாகிர் நாயக் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

அண்மைக்காலமாக சர்ச்சையான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஜாகிர் நாயக், மலேசிய இந்துக்கள் அந்த நாட்டுப் பிரதமர் மஹதீர் மொஹமத்தை ஆதரிக்காமல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவாக இருப்பதாக ஜாகிர் நாயக் கூறியிருந்தார். இது மலேசிய இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய விருந்தாளியான தான், மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என சில தரப்பினர் விரும்புகிறார்கள் என்றால், தனக்கு முன்பே அந்த நாட்டுக்கு விருந்தினராக வந்த சீனர்கள் வெளியேற வேண்டும் என்று ஜாகிர் நாயக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே மலேசிய பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். குறித்த விசாரணைகளில்  ஜாகிர் நாயக்கின் செயற்பாடுகளும் கருத்துக்களும் மலேசியாவின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விசாரணையாளர்கள் கருதினால் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.