கிழக்கின் தமிழ்பெண்களின் வேலைவாய்ப்பு ,பாதுகாப்பு வழங்கும் நிறுவனமான மட்டக்களப்பு Brandix ஆடைத்தொழிற்சாலை!!!
கிழக்கில் வாழும் பல தமிழ்பெண்களின் அன்றாட வாழ்க்கையை பூர்த்தி செய்யவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதிலும் வேலை இல்லை எனும் மனஉளச்சலில் உள்ளோருக்கு நிவர்த்தி செய்வதில் முன்னிற்கும் மட்டக்களப்பு Brandix தனியார் ஆடைத்தொழிற்சாலையினை பாராட்டியாக வேண்டும் .
ஒவ்வொரு தமிழ்கிராமத்திலும் பாதைகள் அபிவிருத்தியடையாத பலவற்றில் அரச பேருந்துகள் செல்லாத ஊரெல்லாம் சென்று, சராசரி ஒவ்வொரு கிராமத்திலிருந்து 30மேற்பட்ட பெண்களை வீட்டின் காலடி தேடி போய் கடமை நிலையத்திற்கு பேருந்தில் ஏற்றி சென்று மீண்டும் உரியவரின் இடத்திற்கு கடமை முடிந்து இறக்கி செல்லும் பாதுகாப்பு இருப்பது எமது தமிழ் பெண்களின் வாழ்வாதரத்தை கொண்டு செல்ல வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் ஆடைத்தொழிற்சாலை இயங்குவது அணைத்து தமிழராலும் போற்றப்பட வேண்டியது.
மட்டக்களப்பில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கரடியனாறு ,கோப்பாவெளி ,வாகரை ,கதிரவெளி,மண்டூர் ,வெல்லாவெளி ,திக்கோடை,கிரான் ,வாழைச்சேனை,செங்கலடி என ஒவ்வொரு கிராமமிருந்து 2000மேற்பட்ட யுவதிகள் இங்கு வேலை செய்வது எத்தனை ஒரு பாரிய பங்களிப்பை வழங்குகின்றது.
எத்தனை தமிழ் யுவதிகள் முஸ்லிம்களின் கடைகளுக்கு சென்று பல பாலியல் அவஸ்தைகள் மதம் ,இனம் மாற்றப்பட்டார்கள் அத்தோடு மத்தியகிழக்கு நாடு சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள் .இப்படியான காலகட்டத்தில் மட்டக்களப்பு தமிழ்பிரதேசத்திலுள்ள தாழங்குடா Brandix ஆடைத்தொழிற்சாலை சேவை அளப்பெரியது .
இந்த தொழிற்சாலை கொடுத்த வேலைவாய்ப்பு சிறிய உதவி என கூற முடியாது ஏழ்மையிலுள்ள தமிழ்பெண்களின் தொழில் வழிகாட்டியாகவும் பல விதவைகள் போரில் ஆண்உறவுகளை இழந்த குடும்பம் மற்றும் தமிழ் ஆண்களின் சாராய குடியால் துன்புறும் குடும்ப பெண்களின் தமது சொந்த காலில் நின்று தமது குடும்பத்திற்கு ஒரு வேளை உணவாவது வழங்கும் அளவு வேலை புரிய கிடைப்பது கிழக்கு தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு கிடைத்த பொக்கிசமாகும் .
என்ன ஒரு கவலை இப்படி ஒரேயொரு நிறுவனம் இருப்பதை விட இன்னும் பல நிறுவனம் புலம்பெயர் தமிழரால் தமிழரின் முக்கிய மத்திய ஊரான களுவாஞ்சிக்குடி ,செங்கலடி,கிரான் ,வாகரையில் தொடங்கி வேலைவாய்ப்பு வழங்கினால் எம்மின இன பெண்களின் வாழ்க்கையும் பாதுகாப்பும் பேணப்படும்.









.jpeg
)





கருத்துகள் இல்லை