சந்திரயான் -2’ தோல்வியை விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர்!!
இந்தியாவால் அனுப்பப்பட்ட ‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், நிலவுப்பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ள செய்தி இந்தியர்களை சோகமாக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாட் ஹூஷைன் கிண்டல் செய்துள்ளார்.
‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது.
இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி நேரடியாக பெங்களுர் மையத்துக்குச் சென்று விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோ தலைவருக்கும் ஆறுதல் கூறினார்.
இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அண்டை நாடுகளான இலங்கை, பூட்டானில் இருந்து தலைவர்கள் வாழ்த்துச் சொல்கின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் #INDIAFAILED என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானியர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவாட் ஹூஷைன் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்திய ருவிட்டர் பயனர்கள் பலர் ஹூஷைனை விமர்சித்துப் பதிவிட்டனர்.
இதற்கு ஹூஷைன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சந்திரயான் – 2 தோல்விக்கு நான் தான் காரணம் என்பது போல் இந்தியர்கள் என்னை கிண்டல் செய்வதைக் கண்டு ஆச்சிரியமாக உள்ளது’ என்று பதிவிட்டு ‘இந்தியா தோற்றுவிட்டது’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை