திறக்கப்பட்டது உலகின் மிகப்பெரிய உணவகம்!!

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம் சிகாகோவில் திறக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


உலகில் அதிக துரித உணவகங்கள் வைத்துள்ள ஒரு நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் உணவகம் திகழ்வதுடன் இந்நிறுவனம் உலகளவில் 30,000 இடங்களுக்கு மேல் இயங்கி வருகின்றது.

உலகளவில் டோக்யோவில்தான் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவு விடுதி செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நவம்பர் 15ம் திகதி சிகாகோவில் 43 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் உணவகத்தை திறக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய தளமாக இது இருக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், இங்கு சிறப்பான காஃபி, டீக்களை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் அதன் வளாகத்திலேயே காஃபி விதைகளை வறுக்கும் ரோஸ்டரிகளும், அதன் சேமிப்பகங்களும் இருக்கும் என்றும், பார், கிரேப்ட் காக்டெயிலுடன் வழக்கத்தை விட வித்தியாசமாக பல ஆடம்பர உணவுப் பண்டங்கள் இங்கு கிடைக்குமென குறிப்பிட்டுள்ளது.

சிகாகோவில் காஃபிக்கான மிக உணர்வுப் பூர்மான சூழலை உருவாக்கித் தருவதாக 2017 இல் ஏற்கெனவே அறிவித்த நிலையில், கலைநயம்மிக்க கட்டட வடிவமைப்பு மூலம் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் மத்தியில் மகிழ்ச்சியோடு செல்வதற்கு உகந்த 3வது இடமாக இது இருக்குமென ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.