கட்டுநாயக்கவில் தமிழ் இளைஞன் கைது!
சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்ல முயன்ற தமிழ் இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் செல்லும் இந்த நபரின் கானா நாட்டின் விசா அனுமதி இருப்பதை கண்காணித்த அதிகாரிகள் அது குறித்து சந்தேகத்தில், கடவுச்சீட்டை விமான நிலையத்தின் தேச எல்லை கண்காணிப்பு பிரிவினரிடம் விசாரணைகளுக்காக கையளித்துள்ளனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட இரசாயன பரிசோதனையில் அந்த விசா அனுமதி போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த இளைஞர் துபாய் நாட்டுக்கு சென்றிருந்த போது அந்நாட்டு விமான நிலையத்தில் சந்தித்த முகவர் ஒருவர் போலி விசாவை தயாரித்து கொடுத்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கானா நாட்டின் இலங்கையில் தூதரகம் இல்லை என்பதுடன் தாய்லாந்தில் உள்ள கானா தூதுவர் இலங்கைக்கான தூதரக பணிகளையும் கவனித்து வருகிறார். இதனால், கானா நாட்டுக்கு செல்லும் பயணிகள் தாய்லாந்தில் உள்ள கானா தூதரகத்திற்கு சென்று விசா அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும் இந்த இளைஞர், எப்போதும் தாய்லாந்து செல்லவில்லை என்பது அவரது கடவுச்சீட்டை பரிசோதித்ததில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த இளைஞர், ஆபிரிக்காவின் லேசத்தோ நாட்டுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பா செல்ல முயற்சித்துள்ளதுடன் அந்நாட்டு அதிகாரிகள் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதுடன் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.
ஆபிரிக்காவின் கானா மற்றும் லேசத்தோ நாடுகளுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், இந்த நாடுகளுக்கு செல்லும் போது அனுசரணையாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதுடன் பணத்தையும் வைப்பு செய்திருக்க வேண்டியது கட்டாயம்.
கைது செய்யப்பட்ட இளைஞர் தனது விமான பயணச்சீட்டுக்களுக்காக மூன்று லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். விமான பயணங்களுக்காக 63 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக கடவுச்சீட்டுடன் விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான தமிழ் இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று இரவு 9.30 மணியளவில் எமிரேட்ஸ் E.K 653 ரக விமானத்தில் டுபாய் நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை