பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
பகிடிவதை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மாணவர்களை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போதே, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ருஹூணு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கொடூரமான முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவன் உட்பட இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் 19 மாணவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
சித்திரவதைக்கு முகம் கொடுத்த மாணவன், தான் எதிர்நோக்கிய அசம்பாவிதம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவ்விடயங்கள் குறித்து தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையிலேயே சந்தேகத்திற்கிடமான மாணவர்களை பொலிஸார் கைது செய்து, நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை