ஊடகக் கட்டுப்பாடுகளை கடுமையாககொண்ட 10 நாடுகள்!

உலகளவில் மிகவும் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாக எரித்ரியா முதலிடம் வகிக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக வடகொரியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலும் ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எரித்ரியா, வடகொரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைப்பாவைகளாகவே செயல்படுகின்றன.

குறித்த நாடுகளுக்கு வெளியே இருந்துதான் சுதந்திரமாக ஏதேனும் பேசமுடியும் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) சுட்டிக்காட்டியுள்ளது.

சவுதி அரேபியா, சீனா, வியட்நாம், ஈரான் போன்ற நாடுகளில் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இணையம், சமூக ஊடகங்கள் மூலமாகவும் அந்த நாடுகளில் செய்தியாளர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், வானொலி அலைகளைத் தடுக்கும் நவீனச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றார். அதன் மூலம் மக்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது கட்டுப்படுத்தப்படுகின்றது.

அதேவேளை, சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடைய நிர்வாகத்தின் கீழ் செய்தியாளர்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாவதாகச் ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

சீனாவில் நவீன கண்காணிப்புச் சாதனம் செயற்பாட்டில் உள்ள நிலையில, அங்குள்ள அதிகாரிகள் உள்நாட்டிலுள்ள இணையப் பயன்பாட்டாளர்களையும், அனைத்துலகச் செய்தியாளர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.