மகாகவி பாரதியாரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!!
மகாகவி பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா நகரசபையின் செயலாளர் இ,தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே,ராஜலிங்கம், பா.பிரசன்னா, சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் அப்பகுதி வர்த்தகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை