இன்று இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள்.!

"ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு
நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிர்ப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த விதிகள் அதிகாரத்தின் சமன்பாடுகளை கொடுரமாகக் குலைத்துப் போட்டன."
செப் 11 தாக்குதல் குறித்து பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard.

2009 இல் புலிகளுக்கும் இப்படி ஒரு நிலையை உலக அரச பயங்கரவாதம்  ஏற்படுத்தியது.
ஆனால் அரச பயங்கரவாதத்தின் எண்ணத்தைப் புலிகள் தோற்கடித்தார்கள். அவர்கள் கொடூரமான விதிகளை நோக்கி நகரவில்லை.

போராடும் தேசிய இனங்களின் ஒற்றைப் பிரதிநிதிகளாக நின்று புதிய கோட்பாட்டை அறிமுகம் செய்தார்கள்.

தலைவர் சற்றேனும் நிதானம் தவறியிருந்தால் புலிகளின் வரலாறு மட்டுமல்ல உலகின் போராடும் தேசிய இனங்கள் அனைத்தினது வரலாறும் தலைகீழாக மாறியிருக்கும்.

ஏனெனில் தமிழீழம் உலக அரச பயங்கரவாதத்தின் ஒரு புதிய பரீட்சார்த்த களமாகவே  அப்போது முற்றுகையிடப்பட்டிருந்தது.

புலிகள் இதை உணர்ந்து விட்டுக்கொடுக்காமல்/ அடிபணியாமல்/ எந்த. சமரசமும் செய்யாமல் இறுதிவரை போராடி தேசிய இனங்களின் இறைமைக்கு புதிய வரைவிலக்கணம் எழுதினார்கள்.

சோவியத் யூனியன் உடைந்த போது/ பெர்லின் சுவர் தகர்ந்த போது/ இரட்டை கோபுரம் நொருங்கிய போது உலக வரலாறு தன்னை புதுப்பித்து கொண்டது.

இதை முன் வைத்து Francis fukuyama போன்ற கோட்பாட்டாளர்கள் வரலாற்றுக்கு முடிவுரை எழுதக்கூடப் புகுந்தார்கள்.

தற்போது அந்த வரிசையில் 'நந்திக்கடல்'.

 2009 மே 17 நள்ளிரவில், ஒரு சிறிய நீர்ப்பரப்பை மட்டும் சாட்சியாக வைத்து இதுவரை கால மனித குல வரலாற்றை அசைத்து பார்க்கும் ஒரு பிரளயம் நடந்தேறியது உலகின் கண்களுக்கு தெரியாமலே போனது.

நவீன மனித குல வரலாற்றை உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான வரலாறாக மாற்றி எழுதிய
இந்த நூற்றாண்டின் தாய்ச் சமர்க்களம் அது.

வரலாற்றின் அதி உச்ச நிகழ்வு அது.

காலங் கடந்து உலக வரலாற்றாசிரியர்களுக்கு/ தத்துவவாதிகளுக்கு/ கோட்பாட்டாளர்களுக்கு தீனி போடக் காத்துக் கிடக்கிறது அந்த நீர்ப்பரப்பு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.