ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஈருருளிப்பயணம்!

10 ஆண்டுகள் கடந்தும் எவ்வித நீதிக்கான முன்னேற்றமுமின்றி ஒரு மூர்க்கத்தனமான இனச்சுத்திகரிப்பே தொடர்ந்தும் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றதென்பதையும், 2009ம் ஆண்டு எமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த சர்வதேசத்திடம் நீதிகேட்க வேண்டிய வரலாற்றுக் கடமைக்கு உரியவர்களாய் நாமிருக்கின்றோம். அத்தோடு இன்றைய தினம் Mosaik cristal என்ற France ஊடக தொலைக்காட்சி ( https://www.mosaik-cristal.tv/les-tamouls-continuent-leur-…/ ) எமது அறவழிப்போராட்டத்தின் உண்மைத்தன்மையை இந்த சர்வதேசத்திற்கு தெரிவித்தத்தோடு , Sélestat மற்றும் Sarreguemines மாநகரசபை எம்மோடு நடைபெற்ற சந்திப்பை அவர்களின் முகப்புத்தகத்தில் பகிர்ந்து அவர்களின் சார்பையும் எமது அறவழிப்போரட்டித்திற்கு வழங்கியுள்ளனர்.
அத்தோடு வரும் வழியில் தமிழீழ உணர்வாளர்களால் நாம் வரவேற்கப்பட்டதோடு அவர்கள் எமக்கு குளிர்பானம் , சுடுபானம் வழங்கி எமது இலக்கிற்கான வழியினை அவர்கள் உணர்வால் வலுப்படுத்தினர்.
நாளையதினம் 10வது நாளாக Solothurn மாநகரசபையில் ஆரம்பிக்கப்பட்டு Geneva நோக்கி மனித நேய ஈருருளிப்பணம் தொடரவுள்ளது. 16.09.2019 அன்று ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள மாபெரும் நீதிக்கான கவனயீர்ப்பில் அனைத்து உறவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை