81 வயதுடைய பெற்ற தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன் – இலங்கையில் பதைபதைக்கும் சம்பவம்!ஹட்டன், வட்டவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொஸெல்ல பிட்டவின் மேற் பிரிவில் உள்ள வீடொன்றில் உயிரிழந்ததாக கூறப்படும் 81 வயதுடைய வல்லியம்மா ராகை எனும் பெண்ணின் சடலம, வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி குறித்த மூதாட்டி உயிரிழந்ததாக கூறி, அவரது மகனினால் இறுதிக்கிரியை செய்வதற்கு பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் சடலத்தை காட்டிற்குள் வீசுவதாக கூறி சடலத்தை எடுத்துச் சென்றதாக உயிரிழந்த பெண்ணின் மருமகள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் நேற்றையதினம் உயிரிழந்த பெண்ணின் 8 வயதுடைய பேரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றிருந்தனர்.


இதன்போது சிறுவன் தனது பாட்டியை தனது தந்தை மற்றும் அண்ணன் தடியால் அடித்தாகவும் ,பாட்டியின் கண்களில் இருந்து இரத்தம் வந்த பின்னர் பாட்டியை பொதியொன்றில் கட்டி தந்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளான்.


சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மருமகளை கைது செய்த பொலிஸார் அவரை கொழும்பிற்கு அழைத்து வந்து மறைந்திருந்த கணவனையும் மகனையும் கைது செய்திருந்தனர்.


உயிரிழந்த பெண்ணின் மகனிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வயோதிப பெண்ணின் சடலம் வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.