திலீபன் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்!!

தெருவோரம் தேடுவாரின்றிக் கிடந்த தியாகம் தேவைப்படும்போது மட்டும் தெய்வீகம் கொள்கிறது..


அயலில் உள்ள ஆண்டிக்கு மட்டும் ஆறுகாலம் அடியவரின் ஆராதனை..

நல்லூரில் ஒதுங்கிய குப்பைகள் அகன்றுபோய் திலீபன் தற்காலிகமாய் சுவாசிக்க ஓர் வழி பிறந்துவிட்டது..

பன்னிரு நாட்களேனும் அவன் சுவாசப்பை சுதந்திரமாய் சுத்தமான  காற்றைச்  சுவாசிக்கட்டும்.

ஆயிரம்பேர் அணிவகுத்து  வருவர் ஐயையோ என்று பதறி நிற்பர்..
ஆறிரண்டு நாட்கள் கடந்தபின்னே அவரவர் வழியில் அந்நியராய் கடந்துபோவார்..

ஆண்டு முழுதும் அழுகிய நாற்றம் தாங்கும் அவன் மூச்சு அதுவரைக்கும் அஹிம்சையைப் பரப்பட்டும்..

-இயல் -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.