தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் முன்னிட்டு ஏற்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன!!


தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தலின் ஆரம்ப நாளுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சற்று நேரத்திற்கு முன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

நினைவாலயத்தில் என்ன ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன என்பது கூட தெரியாமல் எதுவுமே செய்யாமல் ஏன் வந்து பார்க்க கூட இல்லாமல் தற்போது நினைவாலயம் எவ்வாறு உள்ளது என்பதனை முகப்பு பக்கங்கள் மூலமாக மட்டும் பார்த்துக் கொண்டு எங்களுடைய பொறுப்பில் தான் நினைவேந்தல் நடைபெறும் என்றும் திலீபன் அண்ணா உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான 9.45 இனை அவர் உண்ணாவிரதம் இருந்த நேரம் 9.30 என மாற்றி அந் நேரத்தில் நினைவேந்தல் நடைபெறும் என்று அறிக்கை விட்டவர்களை குறித்த நேரத்திற்கு வந்து நிகழ்வுகளை பொறுப்பேற்று நடாத்தி தருமாறு கேட்டுக் கொள்வதுடன் எதுவுமே செய்யாமல் பொறுப்பு நாமே என்று அறிவித்தவர்கள் தயவு செய்து தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு அணிவிக்க மலர் மலைகள் மற்றும் பூக்களையாவது கொண்டு வந்து பொறுப்புடன் நடாத்தி தாருங்கள் என்று அழைக்கின்றோம்.
அத்துடன் நினைவேந்தலுக்குரிய நினைவுச்சுடரை கூட வைக்காமல் அதற்குரிய எந்த ஒழுங்குகளையும் செய்யாமல் நாம் தெரிவு செய்த மாவீரர் பெற்றோரே நினைவுச்சுடரை ஏற்றுவார்கள் என்று கூறியவர்களுக்கு நாம் நினைவுச் சுடருக்கான ஒழுங்குகளை மேற்கொண்டு விட்டாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நீங்கள் பொறுப்பெடுத்து நடாத்த வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் நாம் எமது கடமைகளை பொறுப்புடன் நினைவாலயத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றே நினைக்கின்றோம் ஆக நாம் பொறுப்புடன் எமது கடமைகளை இயலுமானவரை செய்து முடித்துள்ளோம் எனவே எந்த பொறுப்புக்களையும் செய்யாமல் எந்தப் பொறுப்புக்களையும் எடுக்காமல் இம் முறை நனைவேந்தல் நிகழ்வுகளை நாமே பொறுப்பெடுத்துள்ளாதாக அறிக்கை விட்டவர்கள் தயவு செய்து குறித்த நேரத்திற்கு வருகைதந்து நாடாத்தி தருமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தன்னலம் பார்க்காமல் இனத்தின் விடிவிற்காக தன்னை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் முதல் நாளில் கலந்து கொள்ளுமாறும் தமிழ்த் தேசத்து மக்களை கேட்டுக் கொள்ளுகின்றோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.