காதலர் தினத்தைக் குறிவைக்கும் கலக்கல் கூட்டணி!

’மொழி’ யில் இருந்து காற்றின் மொழி வரை புது மாதிரியான திரைப்படங்களை இயக்கிய ராதாமோகனும், ஆரம்பத்தில் இருந்தே ஒரு மாதிரியான படங்களை இயக்கி நடித்த எஸ்.ஜே. சூர்யாவும் இணைகிறார்கள். இந்த காம்பினேஷன் பற்றித்தான் இப்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது.



எஸ்.ஜே. சூர்யாவின் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 13) இந்த படத்துக்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. “ராதாமோகன் இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறாரோ அது மாதிரி இது இருக்காது. ரொமான்ட்டிக், டிராமா, த்ரில்லர் என கலக்கலான கலவையில் படம் வரப் போகிறது. இசைக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த படத்தில் அதிக வேலை இருக்கிறது. ராதாமோகன் சொன்ன கதையைக் கேட்டு சிலிர்த்துப் போய் நான் நடிக்க மட்டுமல்ல தயாரிக்கவும் சம்மதித்துவிட்டேன்’ என்கிறார் எஸ்.ஜே. சூர்யா.



ராதாமோகன், எஸ்.ஜே. சூர்யா என எதிர்பாராத இந்த கூட்டணியில் இணையப் போகும் நாயகி யார் என்பதற்கான வேட்டையைத் தொடங்கிவிட்டார்கள். ஸ்க்ரிப்ட் மேல் உள்ள நம்பிக்கையால் ஹீரோயின் யார் என்பதை முடிவு செய்யாமலேயே பூஜையைப் போட்டுவிட்டனர். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன், கலை இயக்குனர் கதிர் என்று அடர்த்தியான கலைஞர்களோடு களமிறங்கும் இந்த டீம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எஸ்.ஜே. சூர்யாவின் அலுவலகத்தில் நடந்த பூஜையில் இயக்குனர் செல்வராகவன் வேறு கலந்துகொண்டிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கான இன்னொரு விவாதச் செய்தி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.